உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்.

திண்டுக்கலில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-21 12:25 IST   |   Update On 2023-07-21 12:25:00 IST
  • மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • குற்றவாளிகள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்பட வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.

குள்ளனம்பட்டி:

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட வக்கீல்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு வக்கீல் ஆனந்த முனியராசன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் பெண்களுக்கு நடந்த அநீதியை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்,குற்றவாளிகள் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்பட வேண்டும்.இதுபோல வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கென்னடி ஜெரால்டு, சகாயராஜ்,உதயகுமார், முகம்மது இக்பால், தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News