உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
- நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் விளக்கினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆலோசகர் ஜெயா தலைமை வகித்தார். லேப் டெக்னீசியன் முருகன் முன்னிலை வகித்தார்.
நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்பரசு விளக்கினார். நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு லேப் டெக்னீசியன் நீலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.