உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் கட்சி நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டம்

Published On 2022-12-11 14:57 IST   |   Update On 2022-12-11 14:57:00 IST
  • அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
  • அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மைதானத்தில் நடத்திக் கொள்ள வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க.,அ.தி.மு.க, பா.ஜ.க ,காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சிகளை பழைய பஸ் நிலையம் காவல் கட்டுப்பாட்டு அறை அருகே பந்தல் அமைத்து நடத்திக் கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மைதானத்தில் நடத்திக் கொள்ள வேண்டும்.

சிறிய ஆர்ப்பாட்டங்கள் பழைய பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நடத்திக் கொள்ள வேண்டும்.

பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைத்துள்ள கடைகளை வியாபாரிகள் அகற்றிக்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News