ராமகொண்ட அள்ளியில் ஸ்ரீ சக்தி அக்குமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் சங்கட சதுர்த்தி பூஜை
- கோ-பூஜை, யாக பூஜை மற்றும் 16 வகை அபிஷேகங்களுடன் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
- மாலை 5 மணிக்கு தொடங்கிய பூஜை இரவு 9 மணி வரை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சப்ஜெயில் ரோட்டில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சங்கட சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது. விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடை பெற்றது.
வினாயக பெருமானுக்கு 608 லிட்டர் பால் அபிஷேகமும் மற்றும் மஞ்சள் குங்குமம், சந்தனம், விபூதி மற்றும் திரவ பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதே போல் தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே மகா சங்கடஹர சதுர்த்தி தினத்தையொட்டி ராமகொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி அக்குமாரியம்மன் ஆலயத்தில், சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதிக்கு, கோ-பூஜை, யாக பூஜை மற்றும் 16 வகை அபிஷேகங்களுடன் மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய பூஜை இரவு 9 மணி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்த பூஜையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி மாதையன் சுவாமிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சங்கட சதுர்த்தி பூஜைகள் நடந்தது.