உள்ளூர் செய்திகள்

கோவையில் இளம்பெண் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பரப்புவதாக மிரட்டல்

Published On 2023-08-24 09:18 GMT   |   Update On 2023-08-24 09:18 GMT
  • கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
  • போலீசார் ஜவுளிக்கடை ஊழியர்கள் 2 பேரை கைது செய்தனர்.

கோவை,

கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயது இளம் பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

அதே ஜவுளிக்கடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 32), தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் (31) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் இளம்பெண்ணுக்கும், சிலம்பரசனுக்கும் நட்பு ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் சிலம்பரசனும், மதனும் விடாமல் அந்த பெண்ணை தங்களுடன் பேசுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

சம்பவத்தன்று செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உன்னை புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம். எங்களிடம் பேசாவிட்டால் அந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் அவர் பெரியகடை வீதி போலீஸ்நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக 2 பேர் மிரட்டுகிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த சிலம்பரசன், மதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News