உள்ளூர் செய்திகள்

கோவையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துக்கள் குறைந்துள்ளது- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி

Published On 2023-06-10 14:57 IST   |   Update On 2023-06-10 14:57:00 IST
  • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் அதிகாரிகளுக்கு 42 டேப்லெட்டுகளை வழங்கினார்.
  • கல்லூரி மாணவர்களுக்கு ராக்கிங் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கோவை,

கோவை மாநகரில் உள்ள 14 போலீஸ் நிலையங்களில் களப் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய டேப்லெட் வழங்கும் நிகழ்ச்சி கோவை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

விழாவில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு 42 டேப்லெட்டுகளை வழங்கினார்.இந்த டேப்லெட்டில் நிறுவப்பட்டுள்ள செயலிகள் உதவிகள் கொண்டு அலுவல் செய்ய வேண்டிய இடத்திற்கு எளிதில் செல்லலாம்.

களத்தில் உள்ள போலீசார் பணி விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதுடன் தகவல்களையும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம்.

மேலும் இதன் மூலம் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள பதட்டமான இடங்கள், முதியோர்களுக்கு உதவுதல், ரவுடிகளை கண்காணித்தல் ஆகியவற்றையும் நிர்வகிக்க முடியும்.

இந்த டேப்லெட்டில் நிறுவப்பட்டுள்ள செயலிகள் மூலம் சேகரித்து பாதுகாக்கப்படும் விபரங்களை தினந்தோறும் அல்லது வாராந்திர அல்லது மாதாந்திர அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிதாக ஏதேனும் ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு இடத்தையோ போலீஸ் நிலைய எல்லைக்குள் சேர்க்க வேண்டும் என்றால் அதையும் ஜி.பி.எஸ்உதவியுடன் மார்க் செய்து கொள்ளலாம். இதில் துணை கமிஷனர்கள் மதிவாணன், சண்முகம், சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்த பின்னர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை நகரில் சிக்னல் இல்லாத சாலையாக, ஸ்மார்ட் சாலையாக பயன்படுத்தி வருகிறோம். களத்தில் வேலை பார்க்கும் போக்குவரத்து போலீசாருக்கு ரிப்ளைட்டிங் ஜாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் அன்றைய நாள் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் போலீசாரை எப்படி அனுகுவது என்பது குறித்து நோட்டீஸ் கொடுக்க உள்ளோம்.

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ராக்கிங் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்து கள் குறைந்து ள்ளது. சாலையை எளிமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மாயமான சிறுவர்கள் நிறைய பேர் காதல் வயப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்களுடன் காணாமல் போனவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். தற்போது 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News