உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சோழபுரத்தில், போதை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு பேரணி

Published On 2023-02-01 09:30 GMT   |   Update On 2023-02-01 09:30 GMT
  • மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு.
  • விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது.

மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் கீழப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணி சோழபுரம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மனித குலத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு, சுவாச குறைபாடு, கண் சிவத்தல், பார்வை குறைபாடுகளும் இதயத் துடிப்பு அதிகரித்து மரணம் விளைவுகளை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.

முன்னதாக கூட்டமைப்பின் சார்பில் சோழபுரம் காவல் நிலையத்தில் மது போதை இல்லாத சோழபுரம் உருவாக கோரிக்கை மனு அளித்தனர்.பேரணியில் சோழபுரம் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சுமையா, சாதிக், பரக்கத்அலி, ரியாஜ், அர்ஷ் முகமது, தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News