அகசிப்பள்ளியில் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
- குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- பாதிப்புகள் குறித்தும், சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வளரிளம் பருவத்தினர்கள் தன்னுரிமை மேம்பாடு, குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இதில் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சரண்யா சதீஷ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி, வழக்கு பணியாளர்கள், விரிவாக்க அலுவலர், ஊர்நல அலுவலர்கள் பங்கேற்று, வளர் இளம் பெண்ணகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த உதவி எண்களான 1098, 181, 14567, 14417 ஆகியவை குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.