உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.

பொது மக்கள் குறைதீர் முகாம் 12 மனுக்கள் உடனடியாக தீர்வு

Published On 2022-12-22 09:14 GMT   |   Update On 2022-12-22 09:14 GMT
  • பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
  • 12 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்கள் விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.

அதில் 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

மேலும் காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், வேணுகோபால், நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News