உள்ளூர் செய்திகள்

மழைநீர் வெளியேற்றும் பணிகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன் ஆய்வு செய்த காட்சி.

கீழநத்தம் பகுதியில் மழைநீர் தேங்கிய தெருக்களில் உடனடி சீரமைப்பு பணி

Published On 2023-11-25 08:34 GMT   |   Update On 2023-11-25 08:34 GMT
  • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
  • ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா செய்தார்.

நெல்லை:

பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர், ஆசிரியர் டி காலனி, மீனாட்சிசுந்தரம் நகர், அருணாசலபுரம் 6-வது தெரு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்த வெளியேற முடியாமலும், அவர்களது அன்றாட பணிகள் முடங்கி கிடப்பதாகவும் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகனிடம் புகார் கூறினர்.

இதையடுத்து உடனடியாக அங்கு சென்று மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதிகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன் பார்வையிட்டார். பின்னர் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, ஒன்றிய மேற்பார்வையாளர் முருகன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் தண்டபாணி குமரன், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், பூர்ணிமா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News