உள்ளூர் செய்திகள்

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்தாகும்

Published On 2023-08-22 15:09 IST   |   Update On 2023-08-22 15:09:00 IST
  • திருச்சி சிவா எம்.பி பேட்டி அளித்தார்
  • நீட் தேர்வு என்பது தேவையற்றது, திட்டமிட்ட சதி

கோவை,

கோவை மாவட்டம் சிறுமுகை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்கினார்.

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

இஸ்ரோவில் தமிழன், சந்திராயன் உருவாக்கத்தில் தமிழன், கூகுளில் தமிழன் என்று தமிழை படித்தவன் உலகத்தை ஆண்டு வருகிறான். ஒரு காலத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியின்போதுதான் மருத்துவம் படிக்க சமஸ்கிரு தம் தேவையில்லை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

நீட் தேர்வு என்பது தேவையற்றது, திட்டமிட்ட சதி. செல்வ வளம் கொழிக்கும் அரபு நாடுகளில் இருந்து பல்வேறு செல்வந்தர்கள் தமிழகம் வந்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் டாக்டராக முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்களும் கூட தனியார் பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய நிலை உள்ளது.

மத்திய அரசு தற்போது இந்திய மருத்துவ கழகத்தை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்படி மாற்றப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதி தான்.இந்திய மருத்துவ கழகத்தை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றுவ தற்கான மசோதா, லோ க்சபாவில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற ப்பட்டு விட்டது.

இதனை தொடர்ந்து அந்த மசோதா மீதான விவாதம் மேல்-சபையில் நடந்தது. அப்போது ஆணைய மசோதாவில் உள்ள பிரிவுகள் 14, 15-ஐ நீக்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன். ஆனால் இதற்கான வாக்கெடுப்பில் அ.தி.மு.க கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது.

தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News