உள்ளூர் செய்திகள்

அமலாக்கத்துறை நடவடிக்கைகளால் பதுங்கி கொள்ள மாட்டேன்- ஆ.ராசா எம்.பி. பேட்டி

Published On 2023-10-13 14:40 IST   |   Update On 2023-10-13 14:40:00 IST
  • 75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்பு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கிறார்.
  • அமலாக்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

கோவை,

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை தனியார் கல்லூரியில் இன்று நடந்த பேச்சு போட்டியை நீலகிரி தொகுதி எம்.பி.ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நான் படித்த காலத்தில் கலை கல்லூரியில் மட்டும்தான் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு நடத்துவதில்லை. அரசியலில் பொறியியல், மருத்துவ மாணவ ர்களுக்கு போதுமான வெளிச்சம் கிடைக்காமல் இருந்ததை இங்கு போக்கி இருக்கின்றோம்.

பள்ளி பருவத்தில் எனக்கு கலைஞரையும், அண்ணாவையும் தெரியாது. பரிசு கிடைக்கும் என்பதால் அண்ணா மறைவிற்கு கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையை படித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தியது.

75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்பு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கிறார். 1975-க்கு முன்னாடியே தமிழகத்தில் அத்தனை கிராமங்களுக்கும் மின் இணைப்பு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. வெற்றி தோல்விகளை தாண்டி, இங்கு இருக்கும் மாணவர்கள் அரசியலில் ஜொலிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து ஆ.ராசா எம்.பி.யிடம் நிருபர்கள், கோவை திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள உங்களது நிலங்களை அமலாக்கதுறை முடக்கியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அமலா க்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஏன் பதுங்கிக்குவாங்களா? என பதில் அளித்தபடியே புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News