உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ரேசன் கார்டுகளை ஒப்படைக்க வந்த மக்கள்

Published On 2022-08-16 08:46 GMT   |   Update On 2022-08-16 08:46 GMT
  • சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும்.
  • போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெரு சேர்ந்த பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிறைவேற்றாவிட்டால் ரேசன் கார்டுகள் ஒப்படைக்கப்படும் என ஒப்படைப்பதற்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் அரிய கோஷ்டி கிராமத்தில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளுக்கு பயனாளி தேர்வில் முறைகேடு நடந்துள்ள நிலையில் தற்போது கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுதியற்ற சில பயனாளிகளை நீக்கினர். இதன் காரணமாக பல வீடுகள் நிலுவையில் உள்ள நிலையில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News