திருவெண்ணைநல்லூர் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவி, மகன் கைது
- தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர்.
- சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த சி.மெய்யூர் பிள்ளை யார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெமினி (வயது 33). செங்கல் சூளை தொழிலாளி. இவரது வீட்டின் எதிரில் 3 சென்ட் இடம் உள்ளது. இவரது பெரியப்பா கண்ணன் (60), இந்த 3 சென்ட் இடத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதை யடுத்து கண்ணன், அவரது மனைவி லட்சுமி (50), மகன் அய்யப்பன் (27) ஆகியோர் சேர்ந்து ஜெமினி யை தடியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த னர். தலையில் பலத்த காயமடைந்த ஜெமினி, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்தவ மனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜெமினியை தாக்கிய கண்ணன், லட்சுமி, அய்யப்பன் ஆகியோ ரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.