உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் காந்தி வழங்கிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ, உதவி கலெக்டர் சதீஷ்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

ஜெகதேவியில் 81 பேருக்கு வீட்டுமனைப்பட்டா -அமைச்சர் காந்தி வழங்கினார்

Published On 2022-11-19 09:20 GMT   |   Update On 2022-11-19 09:20 GMT
  • வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நட்நதது.
  • தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி,

பர்கூர் தாலுகா ஜெகதேவி ஊராட்சியில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நட்நதது. இதற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 81 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் காந்தி வழங்கி பேசியதாவது:-

தமிழக முதல் அமைச்சர் பதவியேற்ற ஒன்றரை ஆண்டில் பொதுக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பெண்களுக்கு இலவச பஸ் வசதி, புதுமை பெண் திட்டத்தின் கீழ் பட்ட படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில், ஜெகதேவி ஊராட்சியை சேர்ந்த 81 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் வீடுமனை பட்டா வழங்கப்பட்டு பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற மாநில முதல் அமைச்சர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஸ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தாசில்தார் பன்னீர் செல்வி, துணை தாசில்தார் பத்மா, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஜெகதேவி கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News