உள்ளூர் செய்திகள்
விழாவில் உதவி கலெக்டர் சரண்யா பேசியபோது எடுத்த படம்.
ஓசூர் அரசு உதவி பெறும் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் உதவி கலெக்டர் பங்கேற்பு
- சிறப்பு அழைப்பாளராக, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு பேசினார்.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஓசூர்,
ஓசூரில் தேன்கனிக் கோட்டை சாலையில் உள்ள புனித ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆஞ்சலா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு பேசினார். மேலும், ஆராதனை சமூக சேவை மைய நிறுவனர் ராதா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினார்.
விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி நாகராஜ், இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.