உள்ளூர் செய்திகள்

ஓசூர் அரசுப்பள்ளியில் விஷவாயு பரவி பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மேயர் சத்யா நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

Published On 2022-10-18 14:35 IST   |   Update On 2022-10-18 14:35:00 IST
  • மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டனர்.
  • மேயர் எஸ். ஏ. சத்யா நேரில் சந்தித்து மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட, டாக்டர்க ளுக்கு அறிவுறுத்தினார்.

ஓசூர்,

ஓசூர், காமராஜ் காலனி யில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை விஷவாயு பரவி 67 மாணவ,மாணவியருக்கு வாந்தி,மயக்கம் ஏற்ப்பட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டனர்.

பெரும்பாலான மாண வர்கள் நலமுடன் வீடு திரும்பிய நிலையில், 7 மாணவர்கள் மட்டும் ஒசூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை, நேற்று ஓசூர் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட, டாக்டர்க ளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளியில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறிந்திட அதிகாரி களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News