உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்றது.
ஓசூர் மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு -மேயர் சத்யா தகவல்
- மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
- ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொண்டு தரம் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்றது.
துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய மேயர் சத்யா, ஓசூர் மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிப்பணிகளுக்காக மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொண்டு தரம் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.