உள்ளூர் செய்திகள்

ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியில், மேயர் சத்யா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

ஒசூர் மாநகரில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொட்டும் மழையில் மேயர் ஆய்வு

Published On 2022-08-04 09:57 GMT   |   Update On 2022-08-04 09:57 GMT
  • கொட்டும் மழையிலும் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
  • பல்வேறு பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்று ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும்நிலையில், ஒசூர் மாநகரின் தாழ்வான பகுதிகளான கேசிசி நகர்,பசுமை நகர் மற்றும் குறிஞ்சி நகர், ஜிஆர்டி சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேயர் சத்யா ,கொட்டும் மழையிலும் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், பல்வேறு பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரிசெய்ய உத்தரவிட்ட அவர், மாநகரில் மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை முடுக்கி விட்டார்.

இந்த ஆய்வின்போது, ஆணையாளர் பாலசுப்பி ரமணியன், துணைமேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் யசஷ்வினி மோகன், மம்தா சந்தோஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News