உள்ளூர் செய்திகள்

யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் மகா சண்டி யாகம் நிறைவு

Update: 2022-08-15 09:48 GMT
  • ஸ்ரீசக்கரம், கலசாபிஷேகமும், பின்னர் நைவேத்யம், தீபாராதனை யும் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஓசூர்,

ஒசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில், உலக நலனுக்காக 27-வது ஆண்டு மகாநவ சண்டியாகம், 3 நாட்கள் நடைபெற்றது.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக, நேற்று கலச பூஜை, ருத்ர ஹோமம்,லட்சுமி ஹோமம்,துர்கா ஹோமத்தை தொடர்ந்து, மூன்றாம் கால மகாநவ சண்டியாகம் நடந்தது.

தொடர்ந்து, மகா சங்கல்பம்,வடுக பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை ஆகிய நிகழ்ச்சிகளும் மற்றும் பூர்ணாஹுதி, நவசண்டி யாக விளக்கவுரையும் நடைபெற்றது.

பின்னர், மகாதீபாராதனை, கலசம் புறப்படுதல் கணபதி, சிவன், அம்பாள், ஸ்ரீசக்கரம், கலசாபிஷேகமும், பின்னர் நைவேத்யம், தீபாராதனை யும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். விழா நடைபெற்ற 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News