உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பகுதி செயலாளர் ராஜி பேசிய போது எடுத்த படம்.

ஓசூர் 29-வது வார்டு அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்

Published On 2022-08-01 15:32 IST   |   Update On 2022-08-01 15:32:00 IST
  • ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள கருமாரி யம்மன் கோவில் அருகே கூட்டம் நடந்தது.
  • இக்கூட்டத்திற்கு, 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

ஓசூர்,

ஓசூர் 29-வது வார்டு அ.தி.மு.க.செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள கருமாரி யம்மன் கோவில் அருகே நடந்த இக்கூட்டத்திற்கு, 29-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

கிழக்கு பகுதி அ.தி.மு.க. அவைத்தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிழக்கு பகுதி அ.தி.மு.க.செயலாளர் ராஜி, மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம ரெட்டி ஆகியோர் கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள். வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சங்கர் என்ற குபேரன் உள்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் வட்ட பொருளாளர் மகாதேவன், மோகன்ராஜ், வெங்கடேஷ், தனபால் சுரேஷ், மதுராஜ் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News