காணத்தக்க கிருஷ்ணகிரி” என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
காணத்தக்க கிருஷ்ணகிரி திட்டத்தில் மெட்ரை அருவியில் மரபு நடைபயணம்
- காணத்தக்க கிருஷ்ணகிரி" என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
- மெட்ரை அருவி மற்றும் மல்லிகார்ஜூன துர்க்கம் கோயில் ஆகிய இடங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சரா பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்படுத்தும் விதமாக "காணத்தக்க கிருஷ்ணகிரி" என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 7 மணிக்கு அஞ்செட்டி வட்டம், குந்துக்கோட்டை அருகிலுள்ள பூதட்டி கொட்டாய் கிராமத்தில் உள்ள மெட்ரை அருவி மற்றும் மல்லிகார்ஜூன துர்க்கம் கோயில் ஆகிய இடங்களை மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
இப்பயணத்தில் ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா , மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயானி மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி, அஞ்செட்டி தாசில்தார் அனிதா, தனி வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை அலுவலர்கள், கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோருடன் இப்பயணத்தில் கலந்துக்கொண்டனர்.