உள்ளூர் செய்திகள்

இணைய தள குற்றங்களை தடுக்க ஹெல்ப் லைன் தொலைபேசி

Published On 2022-12-08 15:18 IST   |   Update On 2022-12-08 15:18:00 IST
  • சைபர் குற்றவாளிகளால் பொதுமக்கள் பெரும் பணத்தை இழந்து வருகின்றனர்.
  • குற்றவாளிகளின் மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் சைபர்‌ குற்றவாளிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்ட‌ போலீஸ் அலுவலக வளாகத்தில், இணைய தள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அறிமுகம் இல்லாத யாராவது ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தினம்தோறும் சைபர் குற்றவாளிகளால் பொதுமக்கள் பெரும் பணத்தை இழந்து வருகின்றனர். எவ்வளவோ விழிப்பு ணர்வு ஏற்படுத்தி னாலும் குற்றவாளிகள் எப்படியா வது ஏமாற்றி பொது மக்கள் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு சேமித்த மொத்த பணத்தையும் திருடி விடுகின்றனர். இதை தடுக்க 1930 என்ற ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் செய்தால், இழந்த பணத்தை மீட்கலாம் என்ற விபரமும் பலருக்கு தெரிவதில்லை. தாமதமாக புகார் தந்தால் பணத்தை மீட்பது கடினம். மக்களின் விழிப்புணர்வுக்காக இந்திய அரசு வலைத் தளத்தில் இதுவரை பதிவான குற்றவாளிகளின் மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ளது. எனவே உங்களை தொடர்பு கொண்டவரின் மொபைல் எண், வங்கி எண் ஆகியவற்றை வலைத் தளத்தில் ஒருமுறை சோதித்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குற்றங்கள் பற்றி புகார் அளிக்க சப்- இன்ஸ்பெக்டர் செல் எண்: 9498202106-ல் தகவல் தெரிவிக்கவும்.

Tags:    

Similar News