உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை
- கடந்த 2 தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது.
- திட்டக்குடியில் சாலையோரம் முறையான வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த 2 தினங்களாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கன மழை தொழுதூர், ராமநத்தம், வாகையூர், இடைச்செருவாய், திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்தது.
இதனால் ராமநத்தம்- விருத்தாச்சலம் மாநில நெடுஞ்சாலையில் சாலை முழுவதும் அதிக அளவில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர். சாலையோரம் மழைக்காலத்தில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் இது போன்று மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் திட்டக்குடியில் சாலையோரம் முறையான வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.