உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர்கள்.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் பேரணி

Published On 2022-06-24 09:54 GMT   |   Update On 2022-06-24 09:54 GMT
  • கெங்கவல்லி அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் பேரணி நடைபெற்றது.
  • பேரணியில் அரசுப்–பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டார வள மையம் சார்பில் கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்திப் பேரணி நடைபெற்றது. பேரணி கெங்கவல்லி அரசு ஆண்கள் பள்ளி அருகே தொடங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியே சென்று, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் முடிவடைந்தது.

பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன், வட்டார மேற்பார்வையாளர் ராணி, ஆசிரியப் பயிற்றுநர்கள் சுப்ரமணியன், அன்பரசு மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 62 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர் . பேரணியில் அரசுப்–பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வட்டார சிறப்பாசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

கடந்த 15 வருடங்களில், மாணவர் தீவிர சேர்க்கையை வலியுறுத்தி நடந்த பேரணிகளில், மாணவர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில், தற்போது முதன் முறையாக , தலைமை ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்றதை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News