நீலகிரியில் குரூப்-1 தோ்வை 672 போ் எழுதினா்
- குரூப்-1 எழுத்து தோ்வு (குரூப்-1) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
- பறக்கும் படையினா் அவ்வப்போது தோ்வு மையங்களில் திடீா் சோதனை நடத்தினா்.
ஊட்டி,
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் வணிக வரி அலுவலா் உள்ளிட்ட பதவிக்கான நேரடி நியமன எழுத்து தோ்வு (குரூப்-1) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.எஸ்.சி.எம்.எம் மேல்நிலைப் பள்ளி, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தோ்வு நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் 1,472 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 672 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினா் அவ்வப்போது தோ்வு மையங்களில் திடீா் சோதனை நடத்தினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய ( டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினா் கிருஷ்ணகுமாா், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் செயின்ட் ஜோசப் பள்ளி தோ்வு மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.