உள்ளூர் செய்திகள்

அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

Published On 2022-08-25 15:27 IST   |   Update On 2022-08-25 15:27:00 IST
  • நேற்று மாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது.
  • இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோடை காலத்து வெப்பத்தை போல் உணரப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், நேற்று மாலை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது.

இதில் தருமபுரி மாவட்டம், மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், கொளகம்பட்டி, கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, மெணசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, கடத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News