புனரமைக்கப்பட்ட ஏரியை, மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் விழா
- 24 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர் வாரி புனரமை க்கும் பணியை, கடந்த ஜனவரி மாதம் ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா தொடங்கி வைத்திருந்தார்.
- ஏரியை சீரமைத்து மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் பகுதியில் உள்ள ஓட்டேரி என அழைக்கப்படும் ஏரியினை கன்சாய் நெரோலக் என்ற பெயிண்ட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் தூர் வாரி புனரமை க்கும் பணியை, கடந்த ஜனவரி மாதம் ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா தொடங்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த ஏரி புனரைமைக்கும் பணி முடிவடைந்து, ஏரியை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏரியினை மாநகராட்சி வசம் ஒப்படைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், மேயர் சத்யா கலந்து கொண்டு பேசினார். மேலும், ஏரியை மாநகராட்சியிடம் ஒப்படைப்பதற்கான கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.
விழாவில், தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை மூத்த துணைத் தலைவர் சுதிர் பிரல்யாட் ரானே, நிறுவனத்தின் பொதுமேலாளர் தமிழ்வாணன், மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரி பாபு, மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் மக்கள் சங்க தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர்.
மேலும் இதில், மாநகராட்சி கவுன்சிலர் ஆஞ்சி, தி.மு.க. நிர்வாகி மாணிக்கவாசகம், மற்றும் ஓசூர் மக்கள் இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் சத்யா தொடங்கி வைத்தார்.