உள்ளூர் செய்திகள்
தஞ்சை நாகம்மாள் கோவிலில் இன்று குருபெயர்ச்சி விழா
- குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.
- இன்று இரவு 9 மணிக்கு குருபகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மானம்புசாவடி ஆட்டுக்கார தெருவில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் குரு பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.
இன்று இரவு 10 மணிக்கு மேல் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார் .
இதை முன்னிட்டு இரவு 9 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மீனம், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் தனுசு ஆகும்.
பரிகார கட்டணம் ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் யாக அபிஷேக பூஜை பொருட்களை பக்தர்கள் முன்னதாகவே கோவிலில் வந்து சேர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.