உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் பேசினார்.

உப்பள தொழிலாளர்களின் குறைகேட்பு கூட்டம்

Published On 2022-10-29 08:42 GMT   |   Update On 2022-10-29 08:42 GMT
  • திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லை.
  • பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணிசூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் கோடி யக்காட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் உப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் பணிச்சூழல், பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகிய குறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

இதுகுறித்து மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-

உப்பள தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News