ஊட்டியில் பச்சை பட்டாணி விலை உயர்வு
- ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி ஊட்டியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இதுதவிர வெளி மாவட்டங்கள், மாநிலங்க ளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, மேட்டுப்பா ளையம் உள்ளிட்ட மலைப்பகு திகளில், பச்சை பட்டாணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஊட்டியில் விளையும் பச்சை பட்டாணி தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டுக ளுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது இப்பகுதிகளில் பட்டாணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு பட்டாணி வரத்து குறைந்துள்ளது. இதனால் பட்டாணியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஊட்டியில் பச்சை பட்டாணி கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது மார்க்கெட்டுக்கு பட்டாணி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து மட்டுமே மார்க்கெட்டுக்கு பச்சை பட்டாணி விற்பனைக்கு வருகிறது என்றனர்.