உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
- என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
- மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி:
கொடைக்கானல் பூண்டி முதல் தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகன் அலெக்ஸ்பாண்டி(23). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அலெக்ஸ்பாண்டி தேவதானப்பட்டியில் உள்ள தனது அண்ணன்வீட்டிற்கு வந்தார். நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே விஷம்குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.