உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-15 12:55 IST   |   Update On 2023-10-15 12:55:00 IST
  • தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தென்மண்டலம் சார்பில் இன்று தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தென்மண்டலம் சார்பில் இன்று தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி, ஈட்டியவிடுப்பு வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கு புதிய அரசாணை வெளியிடவேண்டும். தொடக்க கல்வித்துறையில் வட்டார முன்னுரிமை வழங்கும் முறையை கைவிடவேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜ்மோகன், மதுரை மாவட்ட தலைவர் முகமதுபிரேம்ரோஸ், தேனி மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட்பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் சிறப்புரையாற்றினார். ஏராளமான ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News