உள்ளூர் செய்திகள்

பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

Published On 2023-03-31 07:09 GMT   |   Update On 2023-03-31 07:09 GMT
  • 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ராசிபுரம்:

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட அரசாணை வழங்கிட வேண்டும்.

மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிட வேண்டும்.

2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவை உயர்த்த முடிவெடுத்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News