உள்ளூர் செய்திகள்
டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்
- கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலையில் திடீரென டெல்லி சென்றார்.
- வி.ஐ.பி.க்கள் யாரையும் கவர்னர் சந்திக்க வில்லை.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலையில் திடீரென டெல்லி சென்றார். அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் யாரையும் சந்தித்து பேசவில்லை. இதுபற்றி கவர்னர் மாளிகை அதிகாரிகள் கூறுகையில், தனிப்பட்ட விஷயமாக கவர்னர் டெல்லி சென்று உள்ளார். வி.ஐ.பி.க்கள் யாரையும் அவர் சந்திக்க வில்லை.
கவர்னர் இன்று இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.