உள்ளூர் செய்திகள்

பழங்குடியினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என். ரவி

Published On 2022-06-08 15:59 IST   |   Update On 2022-06-08 15:59:00 IST
  • வாழ்க்கையில் சாதிக்க கனவு காண வேண்டும் என அறிவுரை
  • மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்.

ஊட்டி,

ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இதனை ஒட்டியே ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு, உறைவிட மேல்நி லைப்பள்ளி உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

நீலகிரிக்கு வருகை தந்துள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று அங்கு சென்றார். பள்ளி மற்றும் விடுதிகளை அவர் பார்வையிட்டார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது:-

மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என கனவு காண வேண்டும். அந்த லட்சியத்தை மனதில் கொள்வதன் மூலம் அதனை அடைய முடியும். மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்.

மாணவர்கள் தன்னை இணையதளம் மூலம் ெதாடர்பு கொண்டு பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். அடிப்படை கல்வியை சிறந்த முறையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, அங்குள்ள அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய பொருட்களின் மாதிரிகளை பார்வையிட்டார்.

Tags:    

Similar News