உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.

அரசு பள்ளி மாணவி மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு

Published On 2022-11-10 14:54 IST   |   Update On 2022-11-10 14:54:00 IST
  • தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.
  • பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.

பேராவூரணி:

தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நடைபெற்றது.

பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி 3000 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.

இதேப்போல் 10-ம் வகுப்பு மாணவி எஸ்.தீபிகா நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், 9- வகுப்பு மாணவி நீவிகா தடை தாண்டும் ஓட்டம் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.

இதில் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற ஆர்த்தி வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, உதவி தலைமை ஆசிரியர் சுப. கார்த்திகேயன், ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன் மற்றும் பயிற்சியாளர் விக்னேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News