முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
போடி அருகே மக்கள் தொடர்பு முகாமில் 778 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- போடி அருகே மக்கள் தொடர்பு முகாமில் 778 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- மனுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே இராசிங்காபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் வேளாண் துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, பட்டு வளர்ப்பு துறை சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு கிராம மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த சிறப்பு முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து உபகரணங்கள் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, அயன் பாக்ஸ், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் 778 பயனாளிகளுக்கு ரூ.4,51,135 மதிப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
மேலும் இந்த முகாமில் பெறப்பட்ட மனுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.