உள்ளூர் செய்திகள்

நெல்லை-காயல்பட்டினம் இடையே அடிக்கடி மாயமாகும் அரசு பஸ்கள்- வியாபாரிகள், பயணிகள் அவதி

Published On 2023-01-28 09:02 GMT   |   Update On 2023-01-28 09:02 GMT
  • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
  • தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்திற்கு தினமும் காலை முதல் மாலை வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

பஸ்கள் மாயம்

ஆனால் சமீப காலமாக மதியம் 1.15 மணிக்கு பிறகு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் அடிக்கடி மாயமாகி விடுவதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். அதாவது மதியம் 1.15-க்கு பின்னர் 1.40 மற்றும் 2.20 மணிக்கு அரசு பஸ்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு புறப்பட்டு செல்லும்.

இந்த பஸ்கள் குரும்பூர், ஆறுமுகநேரி வழியாக காயல்பட்டினத்திற்கு செல்லும். இதேபோல் 2.45 மற்றும் 3.15 மணிக்கு தனியார் பஸ்கள் அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சிரமம்

இந்நிலையில் மதியம் 1.15-க்கு பின்னர் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் அதனை நம்பி வரும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் புதிய பஸ் நிலையத்தில் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனை தனியார் பஸ்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி சரக்குகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக சில பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.

எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News