உள்ளூர் செய்திகள்

இனிப்பு வழங்கி டிரைவர்- கண்டக்டரை வரவேற்றனர்.

கொரோனாவால் நிறுத்தப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கம்

Published On 2022-11-17 10:06 GMT   |   Update On 2022-11-17 10:06 GMT
  • புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு பஸ் மீண்டும் இயக்கப்படும்.
  • டிரைவர், கண்டக்டருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

வல்லம்:

தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு செங்கிப்பட்டி வழியாக இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து கொரோனா பொது முடக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டிருந்தது.

இப்பேருந்தை மீண்டும் அதே வழிதடத்தில் இயக்கிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த செப்டம்பர் 26 அன்று செங்கிப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைதொடர்ந்து செப்டம்பர் 24 அன்று பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர் திருஞானம் ஆகியோர் தஞ்சாவூரிலிருந்து புதுகரியப்பட்டி கிராமத்திற்க்கு அரசு நகர பேருந்து மீண்டும் இயக்கப்படும் என உறுதியளித்த அடிப்படையில் இன்றைய தினத்திலிருந்து மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கிப்பட்டியில் இன்று காலை 07 மணிக்கு வந்த இப்பேருந்திற்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேருந்திற்க்கு மாலை அணிவித்து, ஓட்டுனர், நடத்துனருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் இரா.முகில், செங்கிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் லதா சுப்பிரமணியன், நிர்வாகிகள்ஜி.தங்கமணி, அய்யாராசு, பெரியசாமி, சம்சுதீன், இப்ராகிம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேருந்திற்க்கு வரவேற்பளித்தனர்.

Tags:    

Similar News