கடலூர் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கொள்ளை
- சந்தேகம் அடைந்த நாகராஜ் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த டி. புதுப்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மீண்டும் தனது வீட்டுக்கு வந்து முன்பக்க கதவை திறக்க முயன்றார். அப்போது கதவை திறக்க முடியாததால் சந்தேகம் அடைந்த நாகராஜ் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தார். அப்போது பின்பக்கம் கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்ற நாகராஜ் தனது அறையில் இருந்த பீரோவை பார்த்த போது திறந்து இருந்தது. அதிலிருந்த 6.5 தங்க நகை, வெள்ளி பொருட்களை காணவில்லை. இந்த நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகராஜ் தனது வீட்டை பூட்டிவிட்டு கதவின் அருகாமையில் சாவியை வைத்துவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அந்த சாவியை கொண்டு முன்பாக்க கதவை உடைக்காமல் திறந்து, உள் பக்கமாக கதவை பூட்டி விட்டு பொருட்களை திருடி கொண்டு, பின்பக்கமாக தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடங்களை சேகரித்து சென்றனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.