உள்ளூர் செய்திகள்

கோவையில் டாக்டர் வீட்டில் ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்கம்-வைரம் திருட்டு

Published On 2023-05-28 09:12 GMT   |   Update On 2023-05-28 09:12 GMT
  • தமிழ்செல்வி அரவிந்தன் கைப்பையில் இருந்த வைர மோதிரத்தை திருடியுள்ளார்.
  • அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.

கோவை,

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அரவிந்தன் . டாக்டர். இவரது வீட்டில் கோவையை சேர்ந்த தமிழ்செல்வி ( வயது45) என்பவர் தங்கி இருந்து வீட்டு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அரவிந்தன் தனது கைப்பையில் வைத்திருந்த வைர மோதிரம் காணாமல் போனது.

இதுகுறித்து அவர் சந்தேகத்தின் பேரில், தமிழ் செல்வியிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்து அதனை எடுக்க வில்லை என கூறி மறுத்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் தமிழ் செல்வியை வேலையை விட்டு நீக்கி விட்டார். பின்னர் அவரது வீட்டில் சரோஜா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.

சரோஜா, தமிழ்செல்வியிடம் சென்று காணாமல் போன வைர மோதிரம் குறித்து கேட்ட போது, அவர் தான் வைர மோதிரத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்செல்வி அந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டார். தொடர்ந்து அரவிந்தன் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை, 2 வைர மூக்குத்தி, 4 வாட்சுகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இதுகுறித்து அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் வேலைக்கார பெண் தமிழ்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News