உள்ளூர் செய்திகள்

கோ-கோ இளையோர் பிரிவு போட்டி: ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி மாணவியர் 3 பேர் தமிழக அணிக்கு தேர்வு

Published On 2022-10-23 13:00 IST   |   Update On 2022-10-23 13:00:00 IST
  • கோ-கோ இளையோர் பிரிவு (14 வயதிற்குட்பட்டவர்கள்) போட்டிகள் நடந்தது.
  • ஜான் போஸ்கோ பள்ளியைச் சேர்ந்த 3 மாணவியர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர்,

ஓசூரில் தேன்க னிக்கோட்டை சாலையில் உள்ள புனித ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோ-கோ இளையோர் பிரிவு (14 வயதிற்குட்பட்டவர்கள்) போட்டிகள் நடந்தது.

இதில் தமிழ்நாடு அணியில் தேர்வாகியுள்ள கோவை, கடலூர். சிவகங்கை, ஈரோடு. கன்னியாகுமரி, கிருட்டிணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் ஏஞ்சலா, மற்றும் தலைமையாசிரியை ஜெயந்தி ஆகியோர் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தார்.

இந்த அணியில், ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளியைச் சேர்ந்த 3 மாணவியர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News