உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சி- நெல்லை புத்தக திருவிழா நாளையுடன் நிறைவு

Published On 2023-03-06 14:49 IST   |   Update On 2023-03-06 14:49:00 IST
  • அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்லூரி மாணவி களுக்கு கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது.
  • போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

நெல்லை:

நெல்லை பொருநை 6-வது புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதா னத்தில் நடைபெற்று வருகிறது.

ஓவியம் வரையும் பயிற்சி

தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும், பொது மக்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கி றார்கள்.

10-வது நாளான இன்று அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்லூரி மாணவி களுக்கு கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

மரக்கன்றுகள்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இன்று புத்தக கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.

புத்தக கண்காட்சியில் தொடர் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஒரு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

இன்று ராணி அண்ணா கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு புத்த கங்களை வாசித்தனர்.

மேலும் தினமும் புத்தகங்கள் வெளியீடு, சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை சிந்துபூந்துறையை சேர்ந்த சண்முகம் என்பவர் எழுதிய நொங்கு வண்டி என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை நிறைவு பெறுகிறது

10 நாட்களாக நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புத்தக கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News