14 வயது சிறுமியை அறையில் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம்
- அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி உடனடியாக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார் .
- சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் புகார் பெற்று போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த கடலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சிறுமியிடம் படிப்பதற்கு புத்தகம் எடுத்து வர வேண்டும் என தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதனையடுத்து சிறுமி தனது புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாலிபர் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது திடீரென்று வாலிபர், 14 வயது சிறுமியை அறையில் வலுகட்டாயமாக கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சத்தம் போடாமல் இருக்க சிறுமியை தாக்கி உள்ளார்.
பின்னர் சிறுமியை அவரது பாட்டி வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டு நடந்ததை தனது பாட்டியிடம் தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி உடனடியாக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார் . தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் புகார் பெற்று போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.