சிறுமியை கற்பழித்து தாயாக்கிய காப்பக உரிமையாளர் கைது
- விடுதியில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கற்பழித்தார்.
- ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று கோயம்பேடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த சார்லசை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58) இவர் ஆதரவற்றோர் விடுதி நடத்தி வந்தார்.
அப்போது அங்கு விடுதியில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து, கற்பழித்தார். இதில் கர்ப்பமான அந்த சிறுமிக்கு கடந்த 2021ல் குழந்தை பிறந்தது.
சிறுமியையும் குழந்தையையும் சென்னை ராஜமங்கலத்தில் உள்ள பெண் ஒருவரிடம் அடைக்கலமாக விட்டுவிட்டு சார்லஸ் தப்பி சென்றுவிட்டார். பின்னர் எந்த தொடர்பும் இல்லாததால் சிறுமி மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சார்லஸ் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். கடந்த ஒரு ஆண்டாக அவர் சிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு நேற்று கோயம்பேடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த சார்லசை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சார்லஸ் மீது போக்சோ, கற்பழிப்பு, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்று சிறையில் அடைத்தனர்.