உள்ளூர் செய்திகள்

கரை  ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்; போலீசார் விசாரணை

Published On 2023-08-13 09:13 GMT   |   Update On 2023-08-13 09:13 GMT
  • 2 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • படகில் கடத்தி சென்றபோது தவறி விழுந்து கரை ஒதுங்கியதா?

தரங்கம்பாடி:

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரையோரத்தில் 2 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுக்கி இருப்பதாக மீனவர்கள் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தரங்கம்பாடி கடற்கரையோர காவல்நிலைய போலீசார் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் ஒருபொட்டலம் கரை ஓதுங்கியதாக தகவல் கிடைத்து கடலோர காவல்படை போலீசார் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொட்டலங்களை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது. தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் அடுத்தடுத்து கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியதால் யாராவது படகில் கடத்திவந்தபோது வீசி சென்றார்களா அல்லது படகில் கடத்தி சென்றபோது தவறிவிழுந்து கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News