ஊராட்சி அலுவலகத்தில் பொருட்கள் சிறித கிடந்த காட்சி.
மயிலாடும்பாறை ஊராட்சி அலுவலகத்தை சூறையாடிய கும்பல்
- அலுவலகத்தில் கதவு உடைக்கப்பட்டு மேஜை, நாற்காலி, டியூப்லைட் உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டு இருந்தன.
- அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். வழக்கமாக ஊராட்சி அலுவலகத்தில் மாலை நேரத்தில் சிறிது நேரம் விளக்கை எரிய வைத்து விட்டு மீண்டும் அணைத்து விட்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு ஊராட்சி அலுவலகத்துக்கு சென்ற போது அங்கிருந்த கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மேஜை, நாற்காலி, டியூப்லைட் உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டு இருந்தன.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது குடி போதையில் யாரேனும் வேண்டுமென்றே அடித்து நொறுக்கினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.