உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட கிருட்டி என்கிற சாந்தகுமார். கைப்பற்றப்பட்ட அரிவாள்கள்.

அரிவாளுடன் சுற்றிய 5 பேர் கும்பல்: வாலிபர் கைது - 4 பேர் தப்பி ஓட்டம்

Published On 2022-10-11 15:37 IST   |   Update On 2022-10-11 15:37:00 IST
  • அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்தனர்.
  • பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் கிருட்டி என்கிற சாந்தகுமார் (வயது19) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்து விசாரிக்க முற்பட்டனர்.

அப்போது பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட கிருட்டி என்கிற சாந்தகுமாரை விசாரித்ததில் வாகன திருட்டு, ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பட்டுக்கோட்டை கிரைம் போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News