உள்ளூர் செய்திகள்

குன்னூரில் விநாயகர் விசர்ஜனம்: 108 சிலைகள் கரைக்கப்பட்டன

Published On 2023-09-23 14:42 IST   |   Update On 2023-09-23 14:42:00 IST
  • சிம்ஸ்பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் லாஸ் நீர்வீழ்ச்சியில் முடிந்தது
  • விநாயகர் சிலை ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தார்

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு இடங்களில் இந்துமுன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் கடந்த 18-ந்ம்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் குன்னூரில் நேற்று நடைபெற்றது. சிம்ஸ்பூங்காவில் தொடங்கிய ஊர்வலம்பெட்போர்டு, மவுண்ட்ரோடு, பஸ்நிலையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சியில் முடிந்தது. அங்கு 108 சிலைகளும் கரைக்கப்பட்டன.

முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தது பொது மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குன்னூரில் விநாயகர்விசர்ஜன விழாவையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News